[X] Close

‘ஹெடிரோலோகஸ் நோய்த்தடுப்பு முறை’ - இருவேறு கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது சரியா?

சிறப்புக் களம்,கொரோனா வைரஸ்

Explained--Mixing-Covid-19-vaccines

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவிவரும் நிலையில், தட்டுப்பாட்டை சமாளிக்க முதல் டோஸ் ஒரு தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பூசியும் போடுகின்றனர் சிலர். இப்படி இருவேறு தடுப்பூசிகளை இரண்டு டோஸ்களாக எடுத்துக்கொள்வதை, ‘ஹெடிரோலோகஸ் நோய்த்தடுப்பு முறை’ (heterologous immunisation) என்கிறார்கள் அறிவியலாளர்கள்.


Advertisement

இப்படி வெவ்வேறு தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது சரிதானா அல்லது அது ஆபத்தான போக்காக மாறிவிடுமோ என்பது பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி என மூன்று தடுப்பூசிகள் விநியோகத்தில் இருக்கும் நிலையில், இப்படி இரு வேறு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பழக்கத்தை, இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை. பிற நாடுகளும்கூட, இதுபற்றி ஆய்வுதான் செய்கிறதே தவிர, அங்கீகாரம் அளிக்கவில்லை.

image


Advertisement

இருப்பினும் உத்தரப்பிரதேசத்தில், தவறுதலாக 20 பேருக்கு இருவேறு தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டது. அந்த விவகாரம், சர்ச்சையும் ஆனது. 'வெவ்வேறு தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது ஆபத்தல்ல' என்பது நிரூபிக்கப்படவில்லை என்பதால், மேற்கொண்டு இப்படியான ஒரு தவறு இந்தியாவில் நடக்கக்கூடாது என அரசு கவனமாக இருக்கிறது.

இருப்பினும் உலக நாடுகள் பல இதை முன்னெடுக்கிறது. கனடாவில், சுகாதார அதிகாரிகள் சிலர் இருவேறு தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்துகின்றார்கள். லேன்செட்டில் வெளியாகியிருக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட 830 மக்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில், முதல் டோஸில் பைசர் (அ) அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியையும், அடுத்த தடுப்பூசி வேறொரு தடுப்பூசியையும் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், இப்படி இருவேறு தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு, ஒரே டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் நபர்களை போலவே மிதமான அல்லது லேசான பக்கவிளைவுகள் தெரியலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் நடைபெற்ற வேறொரு ஆய்வில், முதல் டோஸ் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியும் – இரண்டாவது டோஸ் பைசர் தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்களுக்கு, இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டு 14 நாள்களுக்குப் பிறகு பிறரைவிடவும் கூடுதல் நோய் எதிர்ப்பு திறன் இருப்பது உறுதியாகியுள்ளது. 


Advertisement

இதுவரை இதுபற்றி செய்யப்பட்டிருக்கும் வேறு சில ஆய்வுகள் சொல்லும் தகவல்கள்:

இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு, வேறொரு தடுப்பூசி போடும்போது, நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிப்பதாக சில அறிவியலாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கோவிஷீல்ட் வகை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது, எதிர்ப்புத்திறன் அதிகமாக இருக்குமென சொல்லப்படுகிறது. 

இருவேறு திறன் கொண்ட தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளும்போது, அதாவது முதல் டோஸ் வெக்டார் தடுப்பூசியையும், இரண்டாவது டோஸ் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியும் எடுத்துக்கொண்டால், நோய் எதிர்ப்புத்திறன் ஆற்றல் பெறும். “இதற்கான காரணம், இவை இரண்டும் வெவ்வேறு ஆற்றல் கொண்ட குறிப்பிட்ட ஒரு ஸ்பைக் புரதத்தை எதிர்த்து செயல்படும். வெவ்வேறு விதமாக, அவை செயலாற்றும்” எனக்கூறியிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டை சேர்ந்த பேராசிரியர் மேத்யூ கூறியுள்ளார்.

image

இவரைப்போலவே, கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனமாக மருத்துவர் ரெட்டி ஆய்வகத்தின் தலைவர் மருத்துவர் ரெட்டி கூறும்போது, “இப்படி இருவேறு தடுப்பூசிகளை போடும்போது, புதுப்புது கொரோனா திரிபுகளை எதிர்ப்பது எளிதாகக்கூடும். அஸ்ட்ராஜெனிகா எனப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி, இந்தியாவில் பரவும் டெல்டா கொரோனா திரிபுக்கு எதிராக தீவிரமாக செயல்படாது என சொல்லப்படுகிறது. ஆகவே இதை முதல் டோஸாக எடுத்துக்கொண்டவர்கள், அடுத்த டோஸூக்கு, டெல்டா திரிபுக்கு எதிரான வேறொரு தடுப்பூசியை போட்டுக்கொள்வது, சிறப்பாக இருக்கக்கூடும். கூடுதல் ஆன்டிஜெனுக்கு எதிராக செயல்பட, இது உதவக்கூடும்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் நிலவிவரும் மிக முக்கியமான பிரச்னையான தடுப்பூசி பற்றாக்குறை, இந்த இருவேறு தடுப்பூசி போடும் முறையை பின்பற்றும்போது தீரக்கூடும். “இரண்டாவது டோஸ் தடுப்பூசியில், தனக்கு வேண்டியது எது என்பதை, சம்பந்தப்பட்ட நபரே முடிவு செய்யப்படும் உரிமையை அவருக்கு அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில், எந்த தடுப்பூசிக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை, குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்து, அதையொரு பரிந்துரையாக சொல்வது அவசியம்” என வேலூரை சேர்ந்த மூத்த தடுப்பூசி ஆய்வாளரும் பேராசிரியருமான ககந்தீப் கூறியிருக்கிறார்.

image

ஜெர்மனி, பிரான்ஸ், யு.கே., கனடா போன்ற நாடுகளில், இளைஞர்கள் மத்தியில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசி தீவிர ரத்த கட்டு சிக்கலை உருவாக்குகிறது என்பதால், அதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு, அடுத்த டோஸ் தடுப்பூசிக்கு, பாதுகாப்பான வேறொரு தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. ஐரோப்பாவில் பல நாடுகளில், இந்த இரு தடுப்பூசி முறை பரவலாக பின்பற்ற வருகிறது.

- நிவேதா


Advertisement

Advertisement
[X] Close