[X] Close

சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா பாதிப்பு!

விளையாட்டு,கொரோனா வைரஸ்

CSK-Batting-Coach-Mike-Hussey-Tested-Positive-for-COVID19-and-currently-he-was-in-Isolation-at-Delhi-Star-Hotel

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மூலம் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனை சென்னை அணியின்  தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார். 

சென்னை அணியுடன் பயோ பபுளில் இருந்த பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி, காசி விஸ்வநாதன் மற்றும் பேருந்து சேவை பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதியாகிய நிலையில் நான்காவதாக மைக் ஹஸ்ஸி பாதிக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் ஆஸ்திரேலியா பறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 


Advertisement

நோய் தொற்று பாதிப்பிலிருந்து அவர் மீண்டதும் மாலத்தீவு வழியாக ஹஸ்ஸி அவரது தாய் நாட்டிற்கு திரும்புவார். அதற்கான பணிகளை சென்னை அணி நிர்வாகம் கவனித்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close