Published : 03,May 2021 04:22 PM

தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவையில் நுழையும் பாஜக!

தமிழக சட்டப்பேரவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இடம்பெற உள்ளனர். இதுவரை தமிழக சட்டப்பேரவையில் இடம் பெற்றிருந்த பாஜக எம்எல்ஏக்கள் யார், யார்..? தற்போது செல்ல இருப்பவர்கள் யார் யார்? - இதோ ஒரு பார்வை..

1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் வேலாயுதம் வெற்றிபெற்றார். இவர்தான் தமிழகத்தின் முதல் பாஜக எம்எல்ஏ.

2001ஆம் ஆண்டு திமுகவுடன் இணைந்து பாஜக களம் கண்டது. இம்முறை மயிலாடுதுறையிலிருந்து ஜகவீர பாண்டியன், காரைக்குடியிலிருந்து ஹெச்.ராஜா, தளியிலிருந்து கே.வி.முரளிதரன் ஆகியோர் பாஜக சார்பில் வெற்றிபெற்று சட்டப்பேரவை சென்றனர்.

இதன் பின் 2006, 2011, 2016 ஆகிய 3 பேரவை தேர்தல்களில் பாஜக களமிளறங்கியபோதும் ஒருவரும் வெற்றிபெற இயலவில்லை. எனினும், இம்முறை நாகர்கோயிலில் இருந்து எம்ஆர் காந்தி, கோவை தெற்கிலிருந்து வானதி சீனிவாசன், திருநெல்வேலியிலிருந்து நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சியிலிருந்து சிகே சரஸ்வதி ஆகியோர் பாஜக சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் நயினார் நாகேந்திரனை தவிர மற்ற மூவரும் முதல் முறையாக பேரவைக்கு செல்ல உள்ளனர்.

எனினும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்.முருகன், ஹெச்.ராஜா, அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்டோர் தோல்வியை தழுவியுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்