[X] Close

SRH vs CSK : டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங் தேர்வு - சிஎஸ்கேவில் மீண்டும் மொயின் அலி

ஐபிஎல் திருவிழா

Sunrisers-Hyderabad-Versus-Chennai-Super-Kings-plays-at-League-Match-Number-23-of-the-IPL-2021-and-SRH-won-the-toss-elected-to-bat-first

SRH vs CSK : டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங் தேர்வு! மொயின் அலி விளையாடுகிறார்!


Advertisement

நடப்பு ஐபிஎல் சீசனின் 23வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதனால் சென்னை அணி முதலில் பவுலிங் செய்கிறது. 

ஐபிஎல் அரங்கில் இதுவரை 14 போட்டிகளில் இரு அணிகளும் மோதி உள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனில் சென்னை அணி ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றிகள் அனைத்தும் சென்னை அணிக்கு தொடர்ச்சியாக கிடைத்தவை. 


Advertisement

மறுபக்கம் ஹைதராபாத் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதனால் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் களம் இறங்குகிறது


Advertisement

இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம். 

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட், டூப்ளசிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, ராயுடு, தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஜடேஜா, சாம் கரன், தக்கூர், இங்கிடி, தீபக் சாஹர். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
டேவிட் வார்னர் (கேப்டன்), பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர், ரஷீத் கான், ஜகதீசா சுச்சித், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது, சித்தார்த்  கவுல். 

Advertisement

Advertisement
[X] Close