Published : 24,Apr 2021 07:32 PM
ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் - காவல்துறை எச்சரிக்கை

ஞாயிறு ஊரடங்கை மீறினால் வாகனங்களில் வெளியே சுற்றினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு ஊரடங்கும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை முழு ஊரடங்கு என்பதால் அநாவசியமாக வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.