[X] Close

‘இது தனிப்பட்ட விஷயம்’ - மனைவியை அடித்த கணவரை தடுத்த போலீஸ் மீது தாக்குதல்

Subscribe
---It---s-personal-matter-----Man-assaults-police-constable-who-stopped-him-from-thrashing-wife--arrested

உத்தரபிரதேச மாநிலம் மொரடாபாத் மாவட்டத்தில் மனைவியை கொடூரமாகத் தாக்கிய நபரை தடுத்து நிறுத்திய உத்தரபிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Advertisement

உத்தரபிரதேசம், போஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பீஜ்னா கிராமத்தில்,  ஒரு பெண் தனது கணவரால் கொடூரமாக தாக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ரோந்துபணியில் இருந்த கான்ஸ்டபிள் ராஜேந்திர சிங் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை மீட்க முயன்றார். ஆனால் மனைவியை தாக்கிக்கொண்டிருந்த அந்த நபர், " தனது தனிப்பட்ட விஷயத்தில்" தலையிட்டதாகக்கூறி  கான்ஸ்டபிளை தாக்கி, அவரின் சீருடையை கிழித்து எறிந்தார்.

இதையடுத்து, மற்றொரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போலீஸை தாக்கிய ரஞ்சித் சிங்கை கைது செய்தனர்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close