[X] Close

வீணான வார்னர் விளாசல்! ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷாபாஸ்! பெங்களூர் வெற்றி!

Subscribe
SRH-versus-RCB-Match-Number-6-of-the-IPL-2021-Season-and-Bangalore-won-the-match-by-6-runs

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இந்த சீசனின் ஆறாவது லீக் ஆட்டத்தில் மோதி விளையாடின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை குவித்தது. அந்த அணிக்காக மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 59 ரன்களை குவித்திருந்தார். 


Advertisement

தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்காக கேப்டன் வார்னர் மற்றும் சாஹா இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். சிராஜ் வேகத்தில் சாஹா ஒரு ரன்னுக்கு அவுட்டானார். அதன் பிறகு களத்திற்கு வந்த மணிஷ் பாண்டேவுடன் கூட்டு சேர்ந்து மாஸாக விளையாடினார் வார்னர். இருவரும் 83 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். 

image


Advertisement

வார்னர் 37 பந்துகளில் 54 ரன்களை குவித்து ஜேமிசன் வீசிய 14வது ஓவரின் இரண்டாவது பந்தில் லாங் ஆன் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

17வது ஓவரில் பேர்ஸ்டோ மற்றும் மணிஷ் பாண்டேவை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார் ஷாபாஸ் அகமது. அந்த ஓவரின் கடைசி பந்தில் மூன்றாவது விக்கெட்டாக அப்துல் சமத் விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார். அது ஆட்டதில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. 

தொடர்ந்து 18வது ஓவரில் விஜய் ஷங்கர் மற்றும் 19வது ஓவரில் ஜேசன் ஹோல்டரும் அவுட்டாகி வெளியேறினர். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ரஷீத் கானும், புவனேஷ்வர் குமாரும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீழ்த்தி இருந்தார். முதல் மூன்று பந்துகளில் 8 ரன்களை எடுத்த அந்த அணி அதற்கடுத்த இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. ரஷீத் மற்றும் நதீம் விக்கெட்டை இழந்தனர். கடைசி பந்தில் 1 ரன்னை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை குவித்திருந்தது. 

அதன் மூலம் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் பெங்களூர் அணி பெற்றுள்ள இரண்டாவது வெற்றி இது. சென்னையில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திலும் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close