சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி, சுரேஷ் ரெய்னா ஓய்வுபெற்ற நிலையில் எந்த அழுத்தமும் இன்றி தங்களுடைய பாணியில் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சற்றுமுன் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன், ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி நிறைவடைகிறது. ஐபிஎல் போட்டிக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த முறை கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுகிறது.
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக சிஎஸ்கே வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் மீண்டும் கெத்து காட்டும் முனைப்பில், முதல் அணியாக சென்னையில் பயிற்சியை தொடங்கியது.
கேப்டன் எம்.எஸ். தோனி தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சீசனில் ஆடாத சுரேஷ் ரெய்னா, இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி, சுரேஷ் ரெய்னா ஓய்வுபெற்ற நிலையில் எந்த அழுத்தமும் இன்றி தங்களுடைய பாணியில் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சற்றுமுன் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
07:03 Anbu Moments! #Yellove #WhistlePodu ?? @msdhoni @ImRaina pic.twitter.com/eJ1pdDuLMt
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2021Advertisement
Loading More post
கெஜ்ரிவால் 'நேரலை' சர்ச்சை: பிரதமர் கண்டிப்பு; வருத்தம் தெரிவித்த டெல்லி முதல்வர் அலுவலகம்
தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை