1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி, வங்கதேச தலைநகர் டாக்கா சென்றடைந்தார். விமான நிலையத்தில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய பிரதமரை நேரில் வரவேற்றார். அப்போது 19 குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்பின் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், இன்று மாலை தாகாவில் நடைபெறும் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் தனி நாடாக பிரிந்ததும் இதற்காக நடந்த போரில் இந்தியா முக்கிய பங்காற்றியதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக நாளை வங்கதேச பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் பல்வேறு ஒப்பந்தங்களிலும் பிரதமர் கையெழுத்திட உள்ளார். பிரதமருக்கு என உருவாக்கப்பட்டுள்ள போயிங் 777 சிறப்பு விமானத்தில் முதன்முறையாக மோடி வெளிநாடு சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் 15 மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி