[X] Close >

விஜயகாந்த் தலைமையில் தேமுதிக வேட்பாளர்கள் நேர்காணல் தீவிரம்!

Interview-with-DMDK-Party-candidates-led-by-Vijayakanth

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.


Advertisement

தேமுதிக சார்பில் போட்டியிட கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதியிலிருந்து விருப்ப மனு பெறப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. சுமார் 2000-க்கும் அதிகமானோர் விருப்ப மனு தாக்கல் செய்திருப்பதாக அக்கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று முதல் வரும் 8-ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கன்னியாகுமரி, நெல்லை, தேனி, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, நீலகிரி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது.


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close