திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இரு பெரும் கூட்டணிகளிலும் இதுவரை தொகுதிப்பங்கீடு நிறைவுபெறவில்லை. திமுக கூட்டணியில் எப்படியாவது இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடுவதுடன் கட்சிக்கு தனிச்சின்னத்தையும் பெற முனைப்பு காட்டியது விடுதலைச் சிறுத்தைகள்.
இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, திமுக 6 தொகுதிகள் ஒதுக்கினால் ஏற்கக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கமிட்டனர். சென்னையில் உள்ள விசிக கட்சி அலுவலகம் வெளியே அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும், 6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் எனவும் அவர்கள் முழக்கமிட்டனர். கட்சி தொண்டர்களிடத்தில் பேசிய திருமாவளவன் கட்சி தலைமையின் முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ