“ஆடுகளுடன் யோகா”: அமெரிக்காவில் பிரபலமாகும் புதுவித உடற்பயிற்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவில் பண்ணை விலங்குகளுடன் யோகா பயிற்சி செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்கள் அதிகமாக இருக்கும் வெர்ஜீனியா மாகாணத்தில், இதுபோன்ற யோகா நிகழ்ச்சி அண்மையில் நடத்தப்பட்டது.


Advertisement

ஆடுகளுடன் பேசிக்கொண்டே பலர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். சிலர் ஆடுகளுக்கு உணவளித்தபடி பயிற்சி செய்தனர். முதுகில் ஏறி விளையாடுவது, தலைமுடியைக் கடிப்பது என ஆடுகளும் உற்சாகமாக இருந்தன. வழக்கமான யோகா பயிற்சிகளில் இருந்து மாறுபட்டிருக்கும் இந்தப் பயிற்சி, மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருப்பதாக பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். பந்தயக் குதிரைகளையே சாந்தப்படுத்தும் சக்தி ஆடுகளுக்கு இருப்பதால், மனித மனங்களும் இவற்றினால் அமைதியடையும் என்பதே இந்தப் பயிற்சிக்குப் பின்னணியில் இருக்கும் அறிவியல் உண்மையாகும்.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement