இன்றைய டெக்னாலஜி உலகில் நிற்பது, நடப்பது, தூங்குவது என எல்லா நேரமும் ஸ்மார்ட்போனை அணைத்த படி இருப்பவர்கள்தான் அதிகம். அந்தளவிற்கு ஸ்மார்ட்போன்கள் உலகை ஆட்சி செய்து வருகின்றன. அதிலும் இந்தியா மாதிரியான மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன முன்னணி நிறுவனங்கள். அந்த வகையில் இந்த மார்ச் மாதம் அறிமுகமாகவுள்ள முன்னணி ஸ்மார்ட்போன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் தயாரிப்பாக 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை களம் இறக்க உள்ளது. ஜியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 சீரிஸ் போனை மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்கிறது. 5000 மெகா ஹெட்ஸ் பேட்டரி திறன் கொண்ட மோட்டோ G10 மாடல் போனும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாம். அதோடு சேர்த்து G30 போனையும் மோட்டோ வெளியிட உள்ளதாம்.
சாம்சங் நிறுவனம் கேலக்சி A52 போனை மார்ச் மாதத்தின் பிற்பாதியில் இந்திய சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5, ரியல்மி GT 5ஜி ஸ்மார்ட்போன், 108 மெகா பிக்சல் கொண்ட 8 சீரிஸ் போனையும் ரியல்மி களம் இறக்குகிறது.
iQOO 7 போனும், ஒப்போவின் F19 புரோ சீரிஸும் மார்ச்சில் வெளியாகிறது.
Loading More post
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
RCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி