அமெரிக்காவில் உள்ள அரிஸோனாவை சேர்ந்தவர் Hayli Baez. டிக் டாக் பிரபலம். இவர், தான் கருவுற்றுள்ள செய்தியை தனது கணவனிடம் சொல்ல மாற்று வழியை பின்பற்றியுள்ளார். அவர் அதை சொன்ன விதத்தையும், அதற்கு அவரது கணவரின் ரியாக்ஷன் என்ன என்பதையும் வீடியோவாக படம் பிடித்து யூடியூப் மற்றும் டிக் டாக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அது இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது.
சுமார் 6.05 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், அழகாக தான் கருவுற்ற செய்தியை தனது கணவர் ரிக்கிடம் சர்ப்ரைஸாக கொடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார் Hayli. அதற்காக அவர் சுரண்டல் லாட்டரி (Lottery Scratch Off Card) ஒன்றை பயன்படுத்தியுள்ளார். அந்த லாட்டரி சீட்டை தன் கணவனிடம் கொடுத்து, அதில் என்ன பரிசு அடித்துள்ளது என்பதை பார்க்க சொல்கிறார். அதன்படியே அவரது கணவரும் அந்த லாட்டரி சீட்டை தேய்க்கிறார். அதில் BABY என எழுதப்பட்டுள்ளதை பார்த்து குழம்பும் அவர், மனைவியின் மாறா புன்னகையை பார்த்து அர்த்தம் செய்து கொள்கிறார்.
பிறகு குஷியில் ஆனந்த கூக்குரல் எழுப்பி தனது மனைவியை கட்டி தூக்குகிறார் அவர். இந்த தம்பதியர் இருவரும் ஒரு பெண் குழந்தைக்கு தற்போது பெற்றோராக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை யூடியூபில் சுமார் எழுபதாயிரம் பேரும், டிக் டாக்கில் மூன்று பில்லியன் பேரும் பார்த்துள்ளனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி