ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டானில் மெத்வெடேவ் தகுதிப்பெற்றுள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெல்பர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் டானில் மெத்வெடேவ் மற்றும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் மோதினர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-4, 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் மெத்வெடேவ் வெற்றிப்பெற்றார். இதனையடுத்து அவர் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றார்.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ரஷ்யாவின் அஸ்லான் கராட்சேவை எதிர்கொண்டார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 நேர்செட்டில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனையடுத்து 9 வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இறுதிப் போட்டியில் நோவாக் ஜோகோவிச் மற்றும் டேனியல் மெத்வெடேவ் ஆகியோர் மோதுகின்றனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி