[X] Close >

கட்டாயமானது ஃபாஸ்டேக்... அஸ்வின் அதிரடி.. சில முக்கியச் செய்திகள்!

Headlines-of-the-day

நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயம் என்ற நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஃபாஸ்டேக் இல்லாமல் வந்த பயணிகளிடம் இரட்டிப்பு கட்டணம் வசூல்.


Advertisement

தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன.

அதிமுக, மக்கள் நீதி மய்யத்தை தொடர்ந்து விருப்ப மனு அளிக்கும் தேதியை அறிவித்தது திமுக.தேர்தல் நெருங்கும் நிலையில் வேட்பாளர்களை முடிவு செய்ய கட்சிகள் தீவிரம்.


Advertisement

ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்.விரைவில் 234 தொகுதிகளிலும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்.

முதல்வர் கொடுக்கும் விளம்பரங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் உறுதி.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயரை கெடுக்க முற்பட்டதாக திஷா ரவி மீது டெல்லி காவல் துறை குற்றச்சாட்டு.மும்பை வழக்கறிஞர் நிகிதா ஜேகப், புனே பொறியாளர் ஷாந்தனுவுடன் இணைந்து காலிஸ்தான் ஆதரவு குழுவின் ஜூம் மீட்டிங்கில் பங்கேற்றதாகவும் புகார்.


Advertisement

இன்னும் 2 முதல் 3 வாரங்களில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேச்சு.
தடுப்பூசிகளை இலவசமாக போடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவும் இ்ல்லை என்றும் தகவல்.

பகவான் கிருஷ்ணர் சுண்டுவிரலில் தூக்கியதாக கருதப்படும் கோவர்தன கிரி மலையின் கற்களை ஆன்லைனில் விற்க முயன்றவர் கைது.உத்தரப்பிரதேசத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த நபர் மீது நடவடிக்கை.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதான அவரது கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன்.காவல்துறையினர் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யதால் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.

சென்னையில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நெருங்கியது இந்திய அணி.முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் 2 ஆவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தல்.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில் ஆங் சான் சூச்சியின் காவல் நீட்டிப்பு. ராணுவத்திற்கு எதிராக பேசினால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை என எச்சரிக்கை

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close