இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அண்மையில் உத்தராகண்ட் மாநில கிரிக்கெட் சங்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார். ஜாபர் உத்தராகண்ட் அணியில் வீரர்களை அவர்களது மதத்தின் அடிப்படையில் விளையாட தேர்ந்தெடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார் சங்கத்தின் செயலாளர் மஹிம் வர்மா. அதற்கு ஜாபர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜாபருக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே. “நான் உங்கள் பக்கம் வாசிம். நீங்கள் சரியானதை தான் செய்துள்ளீர்கள். உங்கள் வழிகாட்டுதலை இழந்தது அந்த வீரர்களின் துரதிர்ஷ்டம்” என கும்ப்ளே ட்வீட் செய்துள்ளார்.
With you Wasim. Did the right thing. Unfortunately it’s the players who’ll miss your mentor ship.
— Anil Kumble (@anilkumble1074) February 11, 2021Advertisement
ஜாபர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2020இல் அவர் உத்தராகண்ட் அணியின் பயிற்சியாளராக தேர்வாகியிருந்தார்.
முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டு தனக்கு மிகுந்த மன வேதனையையும், வலியையும் கொடுத்ததாக சொல்லி இருந்தார் வசிம் ஜாபர். “சிபாரிசு செய்வதாக சொல்லி தகுதியும், திறனும் இல்லாத வீரர்களை அணிக்குள் சேர்க்கும்படி நிர்பந்தித்தனர். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால் இது மாதிரியான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
பயிற்சிக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் வெள்ளி அன்று நமாஸ் செய்தேன். நான் மதவாதி என்றால் பயிற்சியை தவிர்த்துவிட்டு நமாஸ் செய்திருப்பேன். ஆனால் நான் அதை செய்யவில்லை. இதில் என்ன தவறு இருக்கிறது” என ஜாபர் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்துள்ளார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!