சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த வியாபாரிகள். கிழிசை, கவலை, வாலை மீன்கள் கூடுதல் விலையுடன் அமோக விற்பனையால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தில் 1500 மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் 800-க்கும் மேற்பட்ட படகுகளில் 3000 மீனவர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு பிடிக்கபடும் மீன்கள் உள்ளூர் விற்பனை மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே போதிய மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் கவலை அடைந்திருந்த நிலையில் தற்போது அதிக அளவில் மீன்கள் கிடைக்க தொடங்கியுள்ளது. இன்று காலை முதலே கிழிசை, கவலை, வாலை மீன்கள் அதிக அளவில் பிடிபட்டது. அதே நேரம் உள்ளூர் வியாபாரிகளும் வெளி மாநில வியாபாரிகளும் போட்டி போட்டு மீன்களை விலைக்கு வாங்கினர்.
இதனால் 40 ரூபாய்க்கு விற்ற கவலை மீன் 70 ரூபாய்க்கும், 90 ரூபாய்க்கு விற்ற கிழிசை மீன் 135 ரூபாய்க்கும் கூடுதல் விலைக்கு விற்பனையானதால் திருமுல்லைவாசல் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Loading More post
டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை