கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ‘எவடு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில், ஒரு விபத்தில் காயம்படும் நடிகர் அல்லுஅர்ஜுனின் முகம் மற்றும் தோல் பகுதிகள் முழுவதும் மற்றொரு நடிகரான ராம் சரணின் முகமாக மாற்றப்படும். அது மாதிரியான முக மாற்று அறுவை சிகிச்சை எல்லாம் சினிமாவில் மட்டும்தான் சாத்தியம் என்றிருந்த சூழலில் உலகிலேயே முதல்முறையாக வெற்றிகரமாக 22 வயது இளைஞருக்கு முகம் மற்றும் கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியை சேர்ந்த ஜோ DIMEO தான் அந்த இளைஞர். கடந்த 2018-இல் நடைபெற்ற ஒரு விபத்தில் கண் இமைகள், காதுகள் மற்றும் அவரது விரல்கள் மாதிரியானவற்றை இழந்த ஜோவுக்கு தான் இப்போது இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த விபத்தில் அவரது முகமும் சிதைந்திருந்தது.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ரோட்ரிகஸின் உதவியுடன், புதிய முகத்தோடு இப்போது புன்னகைக்கிறார் ஜோ. கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு 140க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கூட்டாக சேர்ந்து 23 மணி நேரம் முகம் மற்றும் கை மாற்று அறுவை சிகிச்சையை ஒரே நேரத்தில் மேற்கொண்டுள்ளனர். பின்னர் இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதா என்பதை அறிய சில மாதங்கள் காத்திருந்து, அதை பரிசோதித்த பிறகே இப்போது தங்கள் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?