செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவிலில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி 1லட்சத்து 30ஆயிரம் ரூபாய் கொள்ளை, நூதன கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.. இந்த வங்கியில் சிங்கபெருமாள்கோவில் வன்னியர் நகரை சேர்ந்த தனலட்சுமி (25) என்பவர், அவருக்கு சொந்தமான நகைகளை அடகு வைத்துவிட்டு ரொக்கமாக 1லட்சத்து 30ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்குச் செல்ல அவரது இருசக்கர வாகனத்திற்கு அருகே சென்ற போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் தனலட்சுமிடம் கீழே 10 ரூபாய் விழுந்து இருப்பதாக கூறியுள்ளனர். அதனை தனலட்சுமி எடுக்க முற்பட்ட போது அந்த மர்ம நபர்கள் தனலட்சுமி கையில் வைத்திருந்த ரூபாய் 1லட்சத்து 30ஆயிரத்தை எதிர்பாராத விதமாக பறித்து சென்றனர்.
இது குறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் மறைமலைநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இந்த நூதன கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!