விஜய்யின் ‘மாஸ்டர்’ பொங்கலுக்கு வெளியாவதையொட்டி விஜய், விஜய் சேதுபதியின் புதிய புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது படக்குழு.
விஜய்யின் 64-வது படமான 'மாஸ்டர்' படத்தை 'மாநகரம்', 'கைதி' வெற்றிப் புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால், வெறித்தனமாக காத்திருகிறார்கள் ரசிகர்கள்.
அனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். பவானி என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாவதால் 100 சதவீத பார்வையாளர்களை தியேட்டர்களில் அனுமதிக்கக்கோரி முதல்வரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார் விஜய். சிம்புவும் ‘ஈஸ்வரன்’ வெளியாவதையொட்டி கோரிக்கை வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்திருந்தது. இதனால், பெரும்பாலான சினிமாத்துறையினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாஸ்டர் வெளியாக இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் படக்குழு விஜய், விஜய் சேதுபதியின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி ட்விட்டரை அதகளப்படுத்தி வருகிறார்கள்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி