கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது
கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்ட்டை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளதை அடுத்து, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது
கொரோனா தடுப்பூசிகளின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு, நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்டிராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கியது. அந்த மருந்தை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது. இந்த மருந்தை அவசரகால தேவைக்குப் பயன்படுத்துவதற்கு நேற்றுமுன்தினம் நிபுணர் குழு ஒப்புதல் அளித்தது.
இதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆருடன் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் நிபுணர் குழு நேற்று ஒப்புதல் அளித்தது. தடுப்பூசியை உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரத் தேவைக்கு மட்டும் அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது.
இதனையடுத்து, மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் பரிந்துரையை ஏற்று கோவிஷீல்ட், கோவாக்சின் கோரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது
’பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், கோவிஷீல்ட் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது’ என்றும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
Loading More post
"அதிமுகவை மீட்போம்; டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும்" - அமமுக பொதுக்குழு தீர்மானம்
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!