அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசுடைமையாக்கப்பட்ட பின்னரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணத்தை விட சுமார் 30 மடங்கு அதிகமாக மாணவர்களிடம் அங்கு கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களிடம் அரசு மருத்துவக்கல்லூரியைப் போன்றே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பழனிசாமி அரசை வலியுறுத்துகிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியான ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களிடம் அரசு மருத்துவக்கல்லூரியைப் போன்றே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பழனிசாமி அரசை வலியுறுத்துகிறேன். (1/4)
அரசுடைமையாக்கப்பட்ட பின்னரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கான கட்டணத்தை விட சுமார் 30 மடங்கு அதிகமாக மாணவர்களிடம் அங்கு கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ரூ.4 லட்சத்திற்கு மேல் கட்டணமாக வசூலிப்பதை ரத்து செய்து விட்டு, அரசு மருத்துவக்கல்லூரி கட்டணமான, ரூ.13,620/- ரூபாயை மட்டுமே ஆண்டுக் கட்டணமாக வசூலிக்க வேண்டும். கட்டணத்தைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராடி வரும் மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் களமிறங்கும்” என கூறியிருக்கிறார்
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி