ஆந்திராவில் தண்டவாளத்தில் மர்மபொருள் வெடித்ததில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ரேணிகுண்டா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மர்மபொருள் வெடித்ததில் பெண் ஒருவர் கை துண்டானது. தாரக ராம் நகர் என்ற பகுதியை சேர்ந்த சசிகலா என்பவர் அந்த பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மாடுகள் தண்டவாளத்தை கடந்தபோது தண்டவாளத்தின் மீது வெண்மை நிறத்தில் பெட்டி ஒன்று இருப்பதைக் கண்டு மாடு மேய்க்கும் குச்சியால் அதனை அகற்றியதாக தெரிகிறது.
திடீரென அந்த பெட்டி வெடித்ததில் அந்தப் பெண் பலத்த காயமடைந்தார். வெடி சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதின் பேரில் சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் மர்மப்பொருள் வெடித்தது எப்படி என்பது குறித்தெல்லாம் அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பலத்த காயமடைந்த அந்த பெண்ணுக்கு ரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தொடர்ந்து ரேணிகுண்டா காவல் துறையினரும் ரேணிகுண்டா ரயில்வே காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி