விம்பிள்டன் டென்னிஸ்: ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Wimbledon-2017--Roger-Federer-beats-Milos-Raonic-to-reach-semi-finals

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


Advertisement

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்,  கனடாவின் மிலோஸ் ரானிச்சை எதிர்த்து விளையாடினார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர், 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றியை வசமாக்கினார். இந்த வெற்றியின் மூலம் ஃபெடரர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும்  அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் உடன், ஃபெடரர் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். 

முன்னதாக தாமஸ் பெர்டிச் உடனான போட்டியில் தொடரின் இரண்டாம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் 7-6, 2-0 என முன்னிலையில் இருந்தபோது காயத்தால் விலகினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement