ஹாலிவுட் நடிகர்களே ஆக்கிரமித்துள்ள 'டெனட்' படத்தில், பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையும், அக்ஷய் குமாரின் மாமியாருமான டிம்பிள் கபாடியா 'பிரியா' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்
உலகின் முக்கியமான இயக்குநர்களில ஒருவராகக் கருதப்படும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள ’டெனட்’ திரைப்படம் இந்தியா முழுக்க இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நேற்று வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் சயின்ஸ்ஃபிக்ஷன் திரைப்படங்கள் எடுக்கும் கிறிஸ்டோபர் நோலன் படங்கள் எப்போது வரும் என்று அவரது ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பார்கள்.
மெமன்டோ, பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட், தி டார்க் நைட் ரைசஸ், இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் என கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்கள் அத்தனையும் உலகம் முழுக்க வசூல் சாதனை செய்தவை. அப்படியொரு புகழ்மிக்க இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் தற்போது ’டெனட்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ஏற்கனவே, இந்தியாவில் வெளியாகவிருந்த இந்தப் படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது.
கடந்த மாதம் ஒருசில நாடுகளில் மட்டும் ’டெனட்’ வெளியாகி இருந்த நிலையில், நேற்று இந்தியா முழுக்க வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் நடிகர்களே அதிகம் ஆக்கிரமித்துள்ள இப்படத்தில், பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமாரின் மாமியார் நடிகை டிம்பிள் கபாடியா ’பிரியா’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கும், கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அக்ஷய் குமார், தனது மாமியார் டிம்பிள் கபாடியா கிறிஸ்டோபர் நோலனுடன் இருக்கும் புகைப்படத்தையும், கிறிஸ்டோபர் நோலன் மாமியாருக்கு எழுதிய குறிப்பையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘இதோ என் பெருமைமிக்க மருமகன் தருணம்’ என்று பூரிப்புடன் கூறியுள்ளார்.
(மனைவி டிம்பிள் கண்ணாவுடன் அக்ஷய் குமார்)
அவர் பகிர்ந்த டிம்பிள் கபாடியா குறித்து கிறிஸ்டோபர் நோலன் எழுதியுள்ள குறிப்பில், ”உங்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. உலகெங்கிலும் பிரியாவை உயிர்பித்ததில் பெருமை அடைகிறேன். உங்கள் திறமையையும் கடின உழைப்பையும் டெனட் படத்திற்கு வழங்கியமைக்கு நன்றி” என்று பாராட்டியுள்ளார். இதனால், டிம்பிள் கபாடியா என்ற ஹாஷ்டேக்கில் இந்திய அளவில் அக்ஷய் குமார் ரசிகர்களும் கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Here’s my proud son-in-law moment! #ChristopherNolan pens a heartfelt note to #DimpleKapadia on the eve of their release.Had I been in her place,I wouldn’t have been able to move in awe but having watched her working her magic in #Tenet,I couldn’t be more happy and proud of Ma ♥️ pic.twitter.com/EgSehxio1I — Akshay Kumar (@akshaykumar) December 5, 2020
அக்ஷய் குமார் மாமியார் டிம்பிள் கபாடியாவும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர்தான். இவரின் மகள் ட்விங்கிள் கண்ணாவை அக்ஷய் குமார் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி