வங்கக்கடலில் உருவாகவுள்ள புயல், குமரிக்கடல் வழியே கடந்து செல்லும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுள்ள கன்னியாகுமரி மீனவர்கள் 1500 பேர் இதுவரை கரைதிரும்பவில்லை.
புயல் எச்சரிக்கையை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற 500க்கும் அதிகமான விசைப்படகுகள் கரைத்திரும்பியுள்ளன. அதேசமயம், தொடர்பு கொள்ள முடியாத வகையில் 200 நாட்டிக்கலுக்கு அப்பால் உள்ள சுமார் 100 படகுகள் இன்னும் கரைத் திரும்பவில்லை. அதில் 1500 மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை.
கடந்த 2017-ஆம் ஆண்டு உருவான ஒக்கி புயலால் ஏராளமான உறவுகளை இழந்த கன்னியாகுமரி கடலோர மக்கள் தற்போது கலக்கமடைந்துள்ளனர். கடலில் சுமார் 1500 மீனவர்கள் புயல் குறித்த எந்த எச்சரிக்கையும் இன்றி இருப்பதாகவும் அவர்களை பாதுகாப்பாக மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
விமான மூலமாகவோ, கப்பல் மூலமாகவோ மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க அவர்களது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயகுமார், மீனவர்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேரளா, கோவா, கர்நாடக, லட்சத்தீவு பகுதிகளில் கரை ஒதுங்க அனுமதி கோரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்