கோவை சுந்தராபுரத்தில் ஆள் மாறாட்டத்துக்காக பெண்ணை கொலை செய்த வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கோவை சுந்தராபுரம் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல். இவருடைய மனைவி மோகனா. இவர்கள் இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக வேலைப்பார்த்து வந்தனர்.
இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு இவர்கள் இருவர் மீதும் ஒடிஷாவில் நிதி நிறுவன மோசடி தொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அப்போது நிதிநிறுவன மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க தனது மனைவி இறந்ததாக ராஜவேல் போலி சான்றிதழ் அளித்தார். இதைத்தொடர்ந்து மோகனா இறப்பை சந்தேகித்த போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போதுதான் வழக்கில் இருந்து தப்ப தனது அலுவலகத்திற்கு வந்த அம்மாசை என்ற பெண்ணை கொலை செய்து, மனைவி இறந்து விட்டதாக நாடகமாடியது அம்பலமானது. கடந்த 2011 ஆம் ஆண்டே ராஜவேல், மோகனா, பொன்ராஜ், பழனிசாமி ஆகியோர் சேர்ந்து கொலை செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இது 2013 ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த வழக்கில் பொன்ராஜ் என்பவர் அப்ரூவராக மாறிவிட்டார். இதனால் ராஜவேல், மோகனா, பழனிசாமி ஆகியோருக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைவருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
Loading More post
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு