[X] Close >

புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது - ஆவின் நிறுவனம்

Milk-service-will-be-available-in-cyclone-times

புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாமலிருக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement

ஆவின் பாலகங்கள், டெப்போக்களில் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆவின் பாலகங்களில் பால் பவுடர், டெட்ரா பால் பாக்கெட்டுகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில் கூடுதலாக 1 லட்சம் லிட்டரும், பிற மாவட்டங்களில் 2 லட்சம் லிட்டரும் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதுதவிர நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலமும் நகரின் பிரதான பகுதிகளில் பால் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் 1800 425 3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் பால் தேவை குறித்து மக்கள் தெரிவிக்கலாம், 93456 60380, 95668 60286, 93840 92349 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close