இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்!

India-Australia-ODI-T20-match-tickets-sold-out

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள், டி20 தொடர்களின் பெரும்பாலான டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளன.


Advertisement

ஐபிஎல் தொடரை முடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். அதற்காக அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.  இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 27-ந் தேதி சிட்னியில் நடக்கிறது.

image


Advertisement

ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடருக்கு பிறகு இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் அடுத்த மாதம் 17-ஆம் தேதி தொடங்குகிறது. சிட்னியில் நடைபெறும் நான்கு ஆட்டங்கள் மற்றும் கேன்பெராவில் நடைபெறும் இரண்டு ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளின் விற்பனை நேற்று தொடங்கியது.

image

இரு மைதானங்களிலும் 50 சதவித அளவுக்கே ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.இதையடுத்து முதல் ஒருநாள் ஆட்டம் தவிர ஏனைய 5 ஆட்டங்களின் டிக்கெட்டுகளும் முழுமையாக விற்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் 27 அன்று சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் 1,900 டிக்கெட்டுகள் மீதமிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.


Advertisement

கொரோனா அச்சுறுத்தலால்  வீட்டுக்குள்ளேயே முடங்கிய ரசிகர்கள் கிரிக்கெட்டை மைதானத்தில் நேரில் கண்டுகளிக்க ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதால் டிக்கெட்டுகள் வேகமாக விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement