செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன? பொதுப்பணித்துறை அதிகாரி விளக்கம்!

Current-status-of-chembarambakkam-Lake

செம்பரம்பாக்கம் ஏரி தற்போது திறக்கப்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Advertisement

செம்பரம்பாக்கம் ஏரிக்கு பிரதானமாக பூண்டி ஏரியிலிருந்து நீர் வரும். தற்போது நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து, பூண்டி ஏரியின் வரும் நீர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், 24 அடி உயரம்கொண்ட ஏரியில் தற்போது நீர்மட்டம் 20 அடிக்குமேல் உயர்ந்துள்ளது.

image


Advertisement

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்தால் ஏரியின் நீர்மட்டம் விரைவாக உயர வாய்ப்புகள் அதிகம். இதுகுறித்து, செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், செம்பரம்பாக்கம் ஏரி தற்போது திறக்கப்படாது என தெரிவித்துள்ளனர். 2015ல் நடந்ததை போல அதிகளவு மழை இப்போது பெய்யவில்லை எனவும் மழை குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நீர்மட்டம் 22 அடியை எட்டியதும் வெள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement