கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் 7 மாத கர்ப்பிணி தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் மணியார் பாளையம் அருகே உள்ள கீழாத்துக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதிக்கு புவனா(5) யமுனா(2) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். நேற்று இரவு ஈஸ்வரனுக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தனது இரண்டு பிள்ளைகளையும் கோபத்தில் அழைத்துக்கொண்டு வெளியே சென்ற ரேவதி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இரவு முழுவதும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று காலை ரேவதியும் அவரது 2 குழந்தைகளும் அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியினர் கரியாலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கரியாலூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி