சென்னையில் மாமனார், மாமியாரை மட்டுமின்றி கணவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பெண்ணைப் பிடிக்க தனிப்படையினர் புனே விரைந்துள்ளனர்.
சென்னை யானைகவுனியில் வசித்து வந்த, ராஜஸ்தானைச் சேர்ந்த தலீல் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகியோர் தங்களது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் அவர்களின் உடல்களை மீட்டதோடு, கொலைச் சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது கொல்லப்பட்ட ஷீத்தலின் மனைவி ஜெயமாலாவே கொலை செய்தது தெரியவந்தது. ஷீத்தலோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த ஜெயமாலா புனேவில் வசித்து வருகிறார். மேலும் தனக்கு ஷீத்தல் 5 கோடி ரூபாய் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடக்கோரி ஜெயமாலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக ஏற்கனவே இருகுடும்பத்தினர் இடையேயும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
இந்நிலையில், ஜெயமாலா மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 5 பேர் பேச்சுவார்த்தை நடத்த புனேவில் இருந்து சென்னை வந்தனர். அப்போது இருதரப்பினரிடையே தகராறு முற்றியதை அடுத்து தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஜெயமாலாவே கணவர் ஷீத்தல் மற்றும், மாமனார், மாமியார் ஆகியோரை நெற்றியில் சுட்டுக்கொலை செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். பின்னர் ஜெயமாலாவும் அவரது உறவினர்களும் ரயில் மூலம் புனேவுக்கு தப்பிச்சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து, தனிப்படை காவல்துறையினர் விமானம் மூலம் புனேவுக்கு விரைந்தனர். எனினும் ஓடும் ரயிலிலேயே அவர்களை பிடிக்க தனிப்படையினர் ரயில்வே காவல்துறையினர் உதவியை நாடியுள்ளனர். அவர்கள் தப்பிச்சென்ற சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளதாகக் கூறும் காவல்துறையினர், விரைவில் ஜெயமாலாவும், கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களும் கைது செய்யப்படுவர் என தெரிவித்துள்ளனர்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?