ரோகித் சர்மா மீண்டும் விளையாட வரும்போது அவர் மீது அழுத்தம் இருக்கும் என்று டெல்லி கேப்பிடல்ஸ் தொடக்க வீரர் ஷிகர் தவன் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்திரேலியா செல்ல இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியிலும் அவர் இடம்பெறவில்லை. அவருக்கு 6 வாரம் ஓய்வு வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் களமிறங்கினார். இது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் ஷிகர் தவன் பேசும்போது "ரோகித் ஒரு மிகச்சிறந்த வீரர். ஆனால் இடையே சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதனால் அவர் பார்மில் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது. அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார் என நினைக்கிறேன். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். ஒரு எதிரணியாக ரோகித்தின் பார்ம் எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும்" என்றார்.
மேலும் "காயத்திலிருந்து ஒரு வீரர் மீண்டு வந்து விளையாடுவது சாதாரண விஷயமில்லை. அவர் மீது ஏகப்பட்ட அழுத்தம் இருக்கும். அதனை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நாங்கள் பார்ப்போம். நாளையப் போட்டியில் மும்பைக்கு எதிராக சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பெற வைக்கும் எண்ணமே இப்போது எனக்கு இருக்கிறது" என்றார் ஷிகர் தவன்.
Loading More post
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?