சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருபவர் மீடியம் ஃபேஸ் பவுலரான சந்தீப் ஷர்மா.
நடப்பு ஐபிஎல் சீசனில் 11 இன்னிங்ஸ் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். புவனேஸ்வர் குமார் காயத்தினால் விலகிய நிலையில் ஹைதராபாத் அணியின் பவுலிங் பலமாக சந்தீப் ஷர்மாவும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
கடந்த 2013 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் இதுவரை 90 ஆட்டங்களில் விளையாடி 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 53 விக்கெட்டுகள் பவர்பிளேயில் எடுத்தவை.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார் அவர்.
இதற்கு முன்னதாக ஜாகீர் கான் பவர்பிளேயில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இன்றைய ஆட்டத்தில் ரோகித் ஷர்மா மற்றும் டி காக் என இருவரையும் சந்தீப் அவுட் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி