ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுவது போல் மோசடி.. முன்னாள் நடத்துநர் கைது.!

The-person-involved--to-be-helping-to-withdraw-money-at-the-ATM-center

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக ஏடிஎம் -ல் பணம் எடுக்கத் தெரியாத நபர்களிடன் மோசடியில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

 

image


Advertisement

கடந்த சில நாட்களாக ஏடிஎம் -ல் பணம் எடுக்கத் தெரியாத நபர்களை குறிவைத்து அவர்களுக்கு உதவுவது போல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.


செல்வகுமார் என்பவரை ஏமாற்றி ரூ.18000, செல்வம் என்பவரிடம் ரூ.11,200, திருப்பதி என்பவரிடம் ரூ.29000, சுப்ரமணி என்பவரிடம் ரூ.10000 என தொடர்ந்து பல நபர்களிடம் மோசடி செய்துள்ளார். ஏடிஎம்-ல் பணம் எடுக்க வருபவர்களுக்கு உதவுவது போல் அவர்களுடைய கார்டு ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு பணம் வரவில்லை எனக்கூறி கார்டை மாற்றிக் கொடுத்து அனுப்பிவிடுவார்.

 


Advertisement

image


அதன்பின் அவர்களின் கார்டை பயன்படுத்தி பண மோசடி செய்ததாக ஏமாற்றப்பட்ட அனைவரும் தனி தனியாக சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதைத் தொடந்து அந்த மர்ம நபரை வங்கி ஏடிஎம்-ல் இருந்த கேமரா பதிவுகளை கொண்டு தேடிவந்தனர்.


இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்பரசன் (52) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக இருந்து கடந்த 2017 ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அவரிடமிருந்து 91,700 ரூபாய் பறிமுதல் செய்த சிங்காரப்பேட்டை போலீசார் அவரை ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement