உத்தரகாண்ட்: 125 ஆண்டுகளுக்கு பின் காணப்பட்ட அரியவகை வண்ணத்துப் பூச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் இமயமலை பகுதியில் தவ்னிராஜா என்ற அரியவகை பட்டாம்பூச்சி கண்டறியப்பட்டுள்ளது. 125 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பட்டாம்பூச்சியை இப்பகுதியில் காண்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

image

அச்செலுரா பிஃபாசியாட்டா எனப்படும் அரியவகை வண்ணத்துப்பூச்சி, கடந்த வாரம் உத்தரகாண்டின் கர்வால் இமயமலை பகுதியில் உள்ள ஸ்ரீதேவ் சுமன் டிட்லி பூங்காவில் காணப்பட்டது. 1890 களில் உத்தரகாண்டின் குமாவோன் பிராந்தியத்தில் இந்தவகை வண்ணத்துப்பூச்சி கடைசியாக காணப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.


Advertisement

“உத்தரகாண்ட் பட்டாம்பூச்சிகள் ஒரு கள வழிகாட்டி” இன் இணை ஆசிரியரும், இயற்கை பாதுகாப்பு அமைப்பான டிட்லி டிரஸ்டின் அறங்காவலருமான சஞ்சய் சோந்தி “கார்வாலில் இந்த வண்ணத்துப்பூச்சி இதற்கு முன்பாக இப்பகுதியில் ஒருபோதும் காணப்படவில்லை. 1893 ஆம் ஆண்டில் பட்டாம்பூச்சிகளைப் பற்றிய ஒரு புத்தகத்தைத் தொகுத்த பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஜி.எஃப் ஹாம்ப்சன் நைனிடாலில் இப்பூச்சியைக் கண்டுபிடித்ததாக பழைய பதிவுகள் உள்ளன. இருப்பினும், தற்போது இப்பூச்சி காணப்படுவது இதுவே முதல்முறை. இந்த வகை பூச்சிகள் பகலில் பறக்கக்கூடியவை, இந்த பெரிய ஆரஞ்சு நிற பட்டாம்பூச்சி கர்வால் இமயமலையில் அரிதாகவே காணப்படுகிறது ”என்றார் சோந்தி.

இந்த பட்டாம்பூச்சியைக் கண்ட முதல் சில நபர்களில் ஒருவரான தேவல்சாரி பரியவரன் சன்ரக்ஷன் சமிதியின் இயக்குனர் அருண் கவுர் கூறுகையில், “கடந்த 15 நாட்களாக பூங்காவை சுற்றிலும் ஏராளமான வித்தியாசமான இந்த பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன. அது ஒரு அரியவகை வண்ணத்துப்பூச்சி என்று அப்போது எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் இதற்கு முன்பு இப்பூச்சியைப் பார்த்ததில்லை, அதனால்தான் இந்த துறை நிபுணர்களின் கருத்தினை அறிய முடிவு செய்து, அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றோம் ” என்கிறார்

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement