நிதானமாக தொடங்கி பின் அதிரடி காட்டிய கோலி ! சிஎஸ்கே வெற்றிப்பெற 170 ரன் இலக்கு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது.


Advertisement

துபாயில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து ஆரோன் பின்ச்சும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். இதில் பின்ச் 2 ரன்களிலும், படிக்கல் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

Image


Advertisement

அதிரடியான ஆட்டத்துக்கு பெயர்போன டிவில்லியர்ஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தரும் 10 ரன்களில் அவுட்டானார். ஆனால் நங்கூரம் போல நிலைத்து நின்றும், அதிரடியாகவும் விராட் கோலி விளையாடினார்.

Image

52 பந்துகளை சந்தித்த விராட் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 90 ரன்களை குவித்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 169 ரன்களை எடுத்தது பெங்களூர். இப்போது 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது சென்னை.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement