நியூயார்க் :டைனோசர் எலும்புக்கூடு ரூ.200 கோடிக்கு ஏலம்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 40 அடி நீளமுள்ள டைனோசர் புதைபடிவ எலும்புக்கூடு  சுமார் 200 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது 


Advertisement

image

கிரேட்டேசியஸ் காலத்தை சேர்ந்த டைனோசர் உயிரின புதைபடிவ எலும்புக்கூடு சிலநாட்களுக்கு முன்பு நடந்த ஏலத்தில், அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட புதிய சாதனை படைத்துள்ளது. இந்த கிறிஸ்டியின் ஏலத்தில் பிக்காசோ, பொல்லாக் மற்றும் மோனட் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தது.


Advertisement

ஸ்டான் என்ற புனைப்பெயர் கொண்ட இந்த  டி. ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு,  அதன் உயர் மதிப்பீட்டான 8 மில்லியன் டாலர்களை விடவும் நான்கு மடங்கு அதிக தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டு  31.8 மில்லியன் டாலர்களுக்கு ஏலம்போனது. அதாவது  சுமார் 200 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

லண்டன் மற்றும் நியூயார்க்கில் தொலைபேசி வாயிலாக நடந்த 20 நிமிட ஏலப் போரில்,  3 மில்லியனில் தொடங்கிய இதன் ஏல மதிப்பு 31.8 மில்லியனாக  உயர்ந்தது.  இறுதியில் லண்டன் ஏல இல்லத்தின் அறிவியல் கருவிகளின் தலைவர் ஜேம்ஸ் ஹைஸ்லோப்  இதனை ஏலம் எடுத்தார், ஆனால் வாங்குபவர் யாரென அடையாளம் காணப்படவில்லை.

ஹைஸ்லோப்பின் கூற்றுப்படி “ ஸ்டானைப்போல டைனோசர் புதைபடிவங்களை முழுமையாக கண்டுபிடிப்பது அரிது , இதுபோன்ற எலும்புக்கூடுகள் சந்தையில் ஏலத்திற்காக வருவது கூட அரிது. கடைசியாக  இதைப்போன்ற ஒப்பிடத்தக்க மாதிரி ஏலத்திற்கு 1997 இல் வந்தது, சூ என்ற  அந்த டி.ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு  8.36 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. அதன் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட 13.5 மில்லியன் டாலர்” என்றார். 13 அடி உயரமும் 40 அடி நீளமும் கொண்ட ஸ்டான் என்ற இந்த டைனோசர் உயிருடன் இருந்தபோது கிட்டத்தட்ட 8 டன் எடையுள்ளதாக இருந்திருக்கும் என விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர், இது  ஆப்பிரிக்க யானையின் எடையை விட இரண்டு மடங்கு அதிகம்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement