சிறுநீரகத்தை சுமந்துகொண்டு மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உயிரிழந்தவரின் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சைக்காக மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டிக் கொண்டு வந்த ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Advertisement

மதுரையை சேர்ந்த வேல்முருகன்(27) என்பவர் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் விரும்பினர். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக வெங்கடேஷ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

image


Advertisement

அவருக்கு வேல்முருகனின் சிறுநீரகத்தை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இதையடுத்து மதுரையிலிருந்து சுமார் மூன்றரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் சிறுநீரகம் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிக்க 50 க்கும் மேற்பட்ட பகுதிகளில் 150 க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

image

தொடர்ந்து நாகர்கோவில் மாநகரில் உள்ள குறுகலான சாலையில் ஆம்புலன்ஸ் வேகமாக வர முடியாது என்பதால் ஆம்புலன்ஸில் இருந்த சிறுநீரகம் கார் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சிறுநீரகம் வெங்கடேஷுக்கு பொருத்தப்பட்டது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement