“சௌந்தர்யாவை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ளவில்லை” - கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சௌந்தர்யாவை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ளவில்லை என கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தெரிவித்துள்ளார்.


Advertisement

கள்ளக்குறிச்சி தனி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு. தியாகதுருகத்தை சேர்ந்தவர் சாமிநாதன் - மாலா தம்பதியினரின் மகள் சௌந்தர்யா. பிரபுவும், சௌந்தர்யாவும் காதலித்து வந்ததாகவும் இதற்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ பிரபு தனது பெண்ணை கடத்தி சென்று விட்டதாக சௌந்தர்யாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு இன்று அதிகாலை சௌந்தர்யாவை திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகின.


Advertisement

image

இதையறிந்த சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் எம்.எல்.ஏ பிரபு வீட்டின் முன்பு துரோகம் செய்துவிட்டாய் என்று கூறி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த தியாகதுருகம் போலீசார் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.

image


Advertisement

இதுகுறித்து எம்.எல்.ஏ பிரபு கூறுகையில், “நான் சௌந்தர்யாவை கடத்தி வந்து வற்புறுத்தி திருமணம் செய்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் ஒரு சம்பவமும் நடக்கவில்லை. நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். சௌந்தர்யா வீட்டில் பெண் கேட்டோம். அவர்கள் தர மறுத்தனர். அதன்பிறகு எனது பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டோம். சௌந்தர்யாவை ஆசை வார்த்தை கூறி கல்யாணம் செய்து கொள்ளவில்லை. காதலித்துதான் திருமணம் செய்து கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement