சங்கர்ராமன் கொலை வழக்கு சினிமாவாகிறது: சங்கராச்சாரியார் ஆகிறார் அனுபம் கெர்!

Anupam-Kher-to-play-Shankaracharya-role-in-Acharya-Arrest-

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மானேஜராக இருந்தவர் சங்கர்ராமன். இவர் கடந்த 3.9.2004-ல் கோயில் அலுவலகத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். 


Advertisement

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ’ஆச்சார்யா அரெஸ்ட்’ என்ற பெயரில் சினிமா உருவாகிறது. டேக் லைனாக, ‘ஒவ்வொரு இந்துவுக்கும் அவமானம்’ என்று குறிப்பிடப்படுகிறது. 

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை கன்னடப்பட இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ராஜூ இயக்குகிறார். இதில் சங்கராச்சாரியராக அனுபம் கெர் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement