கொடைக்கானலில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி...

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொடைக்கானலில் திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் முத்துசாமி, சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரசுரங்களையும், முகக்கவசங்களையும் வழங்கி பேசினார்.


Advertisement

image

கொடைக்கானலில் முகாமிட்டுள்ள திண்டுக்கல் மாவட்ட காவல் சரக துணை தலைவர் முத்துசாமி காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து சமூகதொண்டு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பிரயண்ட் பூங்கா அருகே, ஏரிச்சாலையில் உலாவந்த சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்களையும், முகக்கவசங்களையும் வழங்கி பேசினார். 


Advertisement

image 
அப்போது ஊரடங்கில் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதனால் கொரோனா இல்லை என சுற்றுலா பயணிகள் அலட்சியமாக இருக்க வேண்டாம். சமூக இடைவெளியோடு முகக்கவசம் மற்றும் கிருமிநாசினியை உபயோகப்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement