[X] Close

குழந்தைகளுக்கு பிறவி வளைபாத குறைபாடா? ஆபரேஷனின்றி குணப்படுத்தலாம்..!

Subscribe
Rickets-can-be-cured-without-operation

பிறவி வளைபாதம் அல்லது பிறவி கோணல் அடிக்கால் என்பது ஒரு பிறவிக்குறையாகும். இந்த பாதிப்போடு பிறந்தவர்களின் ஒரு பாதமோ அல்லது இரு பாதங்களுமோ கீழே அல்லது உள்நோக்கி திரும்பி இருக்கும். பாதிக்கப்பட்ட காலானது மற்ற சாதாரண காலை விட சிறியதாக இருக்கும். ஆயிரத்தில் ஒரு குழந்தையை பாதிக்கும் இந்த பிறவி வளைபாதத்திற்கு முன்பெல்லாம் அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்ற நிலையில், தற்போது PONSETI METHOD எனப்படும் எளிய முறையில் பாத வளைவானது படிப்படியாக சரி செய்யப்பட்டு சீரான நிலைக்கு மாற்றப்படுகிறது. இதற்கு முழு உதாரணமாக, திகழ்கிறான் நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தை சேர்ந்த சுபாஹின் மகன்.


Advertisement

image

குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி பாத வளைவு குறைபாட்டுக்கு தொடக்கத்திலேயே சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 400 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் எளிய முறையில் பிறவி வளைபாதம் குறைபாடு முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

image

 சிகிச்சைக்குப் பிறகு வளைபாதம் சமச்சீராக மாறிய பிறகும்கூட பழைய நிலைக்கு மாறிவிடாமல் இருப்பதற்காக அலுமினியத்தால் செய்யப்பட்ட "பாத விலகல் இறுக்கி" எனப்படும் பூட்ஸ் வழங்கப்படுகிறது. 3 மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 23 மணி நேரம் என்ற கணக்கில் 3 முதல் 4 வயது வரை இரவு தூங்கும்போது குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும். பிறவி குறைபாடு என்பதால் குழந்தை பிறந்த ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சைபெறுவது அவசியம் எனக்கூறும் மருத்துவர்கள், இதனால் எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளி ஆவதிலிருந்து தடுக்க முடியும் என்கிறார் கோவை அரசு மருத்துவமனையின் முட நீக்கியல் துறை தலைவர்
வெற்றிவேல் செழியன்.

வீட்டு வேலைக்குச் சென்ற மூதாட்டி... மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழப்பு 


Advertisement

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close