வீட்டு வேலைக்குச் சென்ற மூதாட்டி... மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுக்கோட்டையில் வீட்டு வேலைக்கு சென்ற மூதாட்டியின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

புதுக்கோட்டை நகரில் உள்ள போஸ்நகர் 4ம் வீதியைச் சேர்ந்தவர் தவமணி (65) என்ற மூதாட்டி. இவர் கீழ 3ஆம் வீதியிலுள்ள யோகாம்பாள் என்பவர் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வீட்டுவேலை பார்த்து வந்துள்ளார்.

image


Advertisement

 இந்நிலையில் இன்று தவமணி துணிகளை துவைத்து காயப்போட மாடிக்குச் சென்றபோது சுவற்றில் இருந்த எர்த் கம்பியை எதிர்பாராதவிதமாக தொட்டதால் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தவமணி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறியதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டு வேலை செய்யும் போது மூதாட்டி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement