மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வாலிபர்.. போலீசார் விசாரணை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட நபர் யார் என்று அடையாளம் காணப்பட்டது.


Advertisement

 

image


Advertisement

 சென்னை பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம், சிபிஐ காலணி விரிவு பகுதியில் உள்ள வயல் வெளியில் சடலம் ஒன்று கிடப்பதாக பள்ளிகரணை போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பள்ளிக்கரணை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

 

 


Advertisement

image

 சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், மடிப்பாக்கம் உதவி ஆணையர் சவரிநாதன் ஆகியோர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். பின்னர் ஜான்சி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது, சம்பவ இடத்தில் இருந்து ஓடிச் சென்ற மோப்ப நாய் மேடவாக்கம் ரங்கநாதபுரத்திற்குச் சென்று நின்றது.

அங்கு விசாரித்ததில் கொலை செய்யப்பட்ட நபர் ரங்கநாதபுரத்தை சேர்ந்த சரக்கு வாகனம் ஓட்டும் டில்லிபாபு (23) என்பது தெரியவந்தது. அவர் இன்று காலை இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக சென்றபோது அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் தலை மற்றும் கையில் பலமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர்.

 

 

image

 கொலை செய்யப்பட்ட டில்லிபாபு மீது 2017 ல் பள்ளிகரணை காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொலை செய்து தப்பியோடிய மர்ம நபர்களை பள்ளிகரணை போலீசார் தேடி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement