[X] Close

மயானத்தில் இறுதியாக முகத்தை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி -உடலை மாற்றி அனுப்பிய மருத்துவமனை

Subscribe
The-hospital-sent-the-body-of-the-deceased-to-another-family

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவரின் உடலானது, கொரோனா முகாமில் சிகிச்சை பெற்று வந்த நபரின் குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று முன் தினம் கொரோனா அறிகுறிகளுடன் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு அவரது உடல் நலம் தேறிய நிலையில் அவர், கொரோனா முகாமிற்கு மாற்றப்பட்டார். அதே போல அதே தினத்தில், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சை பிரிவில் மற்றொரு நபர் அனுமதிக்கப்பட்டார்.


Advertisement

அவரை முதலில் சிகிச்சைப் பெற்ற நபரின் அதே படுக்கையில் ஊழியர்கள் படுக்க வைத்ததாகத் தெரிகிறது. இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

image

( கோப்புப்படம்)


Advertisement


இதனிடையே கொரோனா முகாமில் சிகிச்சைப் பெற்று வந்தவரின்  உறவினர் ஒருவர் மருத்துவமனையில் பணி புரிந்து வந்த நிலையில், அவர் அவரது உடல் நலம் குறித்து ஊழியர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் இறந்து விட்டதாக ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அவரின் இறுதிச்சடங்கிற்கான பணிகளைச் செய்தனர். இதனையடுத்து உடலானது அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மயானக் கொட்டகையில் இறுதியாக முகத்தைக் காண்பதற்கு முகத்திரையானது விலக்கப்பட்டது. அப்போது இறந்தவர் தங்களது உறவினர் இல்லை என்பதை உறுதி செய்த உறவினர்கள் பதட்டமடைந்து மருத்துவமனைக்கு தகவலை கடத்தினர்.

 இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர், உயிரிழந்தவரின் குறிப்புகளை ஆய்வுசெய்தபோது, திருக்கோயிலூர் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாலர் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை மாற்றி, தொட்டியத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் உறவினர்களிடம் ஒப்படைத்தது தெரியவந்தது. 

இதையடுத்து உயிரிழந்த பாலரின் உடல் திருக்கோயிலூரில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து, இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர் .

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close