எஸ்.பி.பி-க்காக கறுப்பு பட்டை அணிந்து ஆடும் சிஎஸ்கே

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றது.


Advertisement

ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச, டெல்லி அணி பேட்டிங் செய்கிறது. இரண்டு அணி வீரர்களும் தங்கள் கையில் கறுப்பு நிற பட்டையை அணிந்துகொண்டு விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் மறைவிற்காக இந்த கறுப்புப் பட்டையை அவர்கள் அணிந்திருக்கின்றனர்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கும் சேர்த்து இரங்கல் தெரிவிக்கும் விதமாக கறுப்புப் பட்டை அணிருந்திருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். சிகிச்சை பெற்ற நாட்களில் கூட அவர் ஐபிஎல் போட்டி நடப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாக அவரது மகன் சரண் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement