தக்கல் முறையில் ஐம்பதாயிரம் விவசாய மின் இணைப்புகள்: உறுதியளித்த அமைச்சர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வரும் ஆறுமாத காலத்திற்குள் தமிழகத்தில் தக்கல் முறையில் ஐம்பதாயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுவிடும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 


Advertisement

image


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்ததோடு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது...


Advertisement

தமிழகத்தில் விவசாயிகளுக்கு, எந்த சூழ்நிலையிலும், எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் மாநில அரசு, வேளாண் திட்டங்களை செயல்படுத்தும்., அதேபோல மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை முதல்வர் தெளிவுபடுத்தி விட்டார். வரும் ஆறுமாத காலத்திற்குள் தமிழகத்தில் தக்கல் முறையில் ஐம்பதாயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுவிடும் என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement