‘பண்டுக்கும்,  முஜிபுர் ரஹ்மானுக்கும் இடையேதான் இன்றைய ஆட்டமே’-ஆகாஷ் சோப்ரா

ipl-2020-DC-VS-KXIP-Today-s-match-is-between-Pant-and-Mujeeb-ur-rahman-says-Akash-Chopra

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோத உள்ளன. 


Advertisement

image

இரு அணிகளுமே முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற வெறியோடு இந்த போட்டியில் விளையாட உள்ளன. 


Advertisement

இந்நிலையில் இரு அணியிலும் இடம் பிடிக்க உள்ள 11 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியலை கணித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. 

image

“கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் (கேப்டன்), மாயங் அகர்வால், சர்பராஸ் கான், நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், மந்தீப் சிங், கிருஷ்ணப்ப கவுதம், கிறிஸ் ஜோர்டான், ஷமி, ரவி பிஷோனி மற்றும் முஜிபுர் ரஹ்மான் விளையாட வேண்டும். 


Advertisement

image

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பிரித்வி ஷா, தவான், ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட், ஹெட்மயர், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, சந்தீப், மிஸ்ரா, அஷ்வின் மற்றும் ரபாடா விளையாட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

image

இதில் டெல்லி அணியின் பண்டுக்கும், பஞ்சாப் அணியின் முஜிபுர் ரஹ்மானுக்கும் இடையே தான் இன்றைய ஆட்டமே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

அதே போல பஞ்சாப் அணியின் இளம் வீரர் ரவி பிஷோனி மேட்ச் வின்னராக ஜொலிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் டெல்லி அணியில் ரஹானே விளையாடினால் பிளெயிங் லெவனில் சிக்கல் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement